நார்வே கால்பந்து சம்மேளன தலைவர் இஸ்ரேலை தடை செய்ய வலியுறுத்து

top-news

நார்வே, அக். 1-

செய்தி-வெற்றி மைந்தன்

நார்வே கால்பந்து சம்மேளன தலைவர் லிஸ் கிளாவெனஸ், இஸ்ரேலை அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த வாரம் நடைபெறவுள்ள யுஈஎப்ஏ வாக்கெடுப்பில் இஸ்ரேலின் ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்பு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.

நார்வே, வரும் அக்டோபர் 11 அன்று ஒஸ்லோவில் இஸ்ரேலுக்கு எதிராக 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு நார்வே தகுதி பெறும்.

யூஇஎப்ஏ நிர்வாகக் குழு உறுப்பினரான கிளாவெனஸ், இந்த ஆட்டத்தை புறக்கணிக்கும் வாய்ப்பை மறுத்தார். ஆனால், இஸ்ரேல் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நான் கொள்கை அடிப்படையில் செயல்படுகிறேன். ஆனால், நாங்கள் தனித்து புறக்கணிப்பு செய்ய மாட்டோம். புறக்கணிப்பு என்பது இஸ்ரேல் எங்களுக்கு பதிலாக உலகக் கோப்பைக்கு செல்வதற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் மீதான தடை குறித்து கிளாவெனஸின் இந்த அழைப்பு, அனைத்துலக கால்பந்து அரங்கில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *