அந்நிய தொழிலாளர் பற்றாக்குறைக்கு ரமணன் தீர்வு காண்பார்! – PRIMAS தலைவர் நம்பிக்கை!
- Thinagaren Sanggaren
- 20 Dec, 2025
டிசம்பர் 20,
கடந்த சில ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய வேலைகளில் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைகள் நிலவி வரும் வேளையில் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் DATUK SERI R RAMANAN முறையான தீர்வை வழங்குவார் என தாம் நம்புவதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷ் கோவிந்தசாமி நம்பிக்கை தெரிவித்தார். அமைச்சரவையில் தமிழ்ப்பேசும் அமைச்சர் இல்லை என கடந்த 2 ஆண்டுகளாக இருந்த குறையை DATUK SERI R RAMANAN நிவர்த்தி செய்துள்ளார்.
இந்திய உணவகத்தில்
அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை குறித்து முன்னமே DATUK SERI R RAMANAN அவர்களிடம் நான்
பேசியுள்ளேன். இது மனிதவள அமைச்சின் தொடர்புடைய விவகாரம் என்பதால் அதன்
அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் DATUK SERI R RAMANAN இந்த சிக்கலுக்கு முழுமையானத் தீர்வை வழங்குவார்
என தாம் நம்புவதாக PRIMAS
தலைவரான டத்தோ சுரேஷ்
கோவிந்தசாமி தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும்
அதன் பின்னர் மீண்டும் தடை செய்யப்பட்டிருப்பதாக டத்தோ சுரேஷ் கோவிந்தசாமி தெரிவித்தார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



