ஜொகூர் மக்களுக்கு சேவை செய்ய PH-க்கு வாய்ப்பு தாருங்கள் – அன்வார்
- Surendran Sumdraraj
- 09 Jul, 2026
ஜொகூர் பாரு, ஜூலை 9-
ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, மாநில மக்களுக்கு சேவை செய்ய பாக்காத்தான் ஹரப்பானுக்கு வாய்ப்பு வழங்குமாறு பிரதமர் Datuk Seri Anwar Ibrahim Johor மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு, இன்று தனது முகநூல் பதிவின் மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
PH தலைவருமான Anwar Ibrahim கூறுகையில், ஜொகூர் மக்களால் ஆட்சி பொறுப்பு வழங்கப்பட்டால், மாநிலத்தின் நலனைப் பாதுகாக்கவும், மக்களுக்கு உண்மையான முன்னேற்றத்தை கொண்டு சேர்க்கவும் PH உறுதியாக செயல்படும் என்றார்.
“ஜொகூர் மக்கள் தங்கள் தேர்வைச் செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த மாநிலத்திற்கு சேவை செய்ய ஹரப்பானுக்கு வாய்ப்பு வழங்குமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் பதிவிட்டார்.
மேலும், மக்களால் நம்பிக்கை வழங்கப்பட்டால், PH முழு அர்ப்பணிப்புடன் உழைக்கும் என்றும், ஜொகூரின் நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும் என்றும் Anwar Ibrahim தெரிவித்தார்.
அத்துடன், கொண்டு வரப்படும் முன்னேற்றம் மாநிலத்தின் அனைத்து மக்களாலும் உண்மையாக உணரப்படும் வகையில் செயல்படுவதே PH-ன் நோக்கம் என அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



