பாரிசான் தனித்து போட்டியிட்டால் பக்காத்தான் தனியாகப் போட்டியிடுவோம்!
- THINAGAREN SANGGAREN
- 17 May, 2026
மே 17,
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் தனித்து போட்டியிடவிருப்பதாக ஜொகூர் மாநிலப் பாரிசான் தலைவர் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தால் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் தனித்துப் போட்டியிடுவோம் என டி.ஏ.பி பொதுச் செயலாளர் Anthony Loke வெளிப்படையாக அறிவித்தார். சட்டமன்றங்களை இப்போதைக்குக் கலைக்க வேண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் காத்திருக்கலாம் என்பதை டி.ஏ.பி வலியுறுத்தியதற்குக் காரணம், தனித் தனித் தேர்தல் நடத்த நிதி அதிகமாகச் செலவிடப்படும். மக்கள் வரி பணத்திலிருந்து தனித் தனித் தேர்தலை நடத்தாமல் நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சொல்லப்பட்டது என Anthony Loke விளக்கமளித்தார்.
ஆனால் ஜொகூரில் பாரிசான் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பை வெளியிட்டதும் நெகிரி செம்பிலானில் பக்காத்தான் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையும் Anthony Loke வலியுறுத்தினார். நாளை ஜொகூரில் தேர்தல் நடைபெறும் என்றால் அதே நாள் நெகிரி செம்பிலானிலும் தேர்தல் நடத்தப்படும் என Anthony Loke தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



