ஜொகூரில் ஆட்சி மாற்றம் வேண்டும்! அன்வார் சூளுரை!
- THINAGAREN SANGGAREN
- 05 Jul, 2026
ஜூலை 5,
எதிர்வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை என பக்கத்தான் தலைவரும் பிரதமருமான DATUK SERI Anwar Ibrahim வலியுறுத்தினார். ஜோகூர் வாழ் மக்களுக்கு முறையான வீட்டு வசதிகளும், புதிய வீடுகளும் கட்டப்படாமல், இருப்பதை DATUK SERI Anwar Ibrahim நினைவூட்டினார். மாநிலத்தின் வளர்ச்சியும் மாநில மக்களின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயன்பெறுவார்கள் என DATUK SERI Anwar Ibrahim தெரிவித்தார்.
ஜோகூரில் வீடுகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் ஜோகூரில் இன்னும் மலிவு விலையிலான வீடுகளை மாநில அரசு அறிமுகப்படுத்தாமல் இருப்பதாகவும் MADANI வீடமைப்புத் திட்டத்தை ஜோகூரில் செயல்படுத்த ஜோகூரில் ஆட்சி மாற்றம் தேவை என DATUK SERI Anwar Ibrahim தெரிவித்தார். குறிப்பாக முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என DATUK SERI Anwar Ibrahim வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



