அதிக வாக்குப்பதிவு PH வேட்பாளர்களுக்குச் சாதகமாக அமையலாம்
- Surendran Sumdraraj
- 09 Jul, 2026
ஜொகூர் பாரு, ஜூலை 9-
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்த சனிக்கிழமை அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வருவது, குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புற பகுதிகளில் போட்டியிடும் Pakatan Harapan (PH) வேட்பாளர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும் என அரசியல் ஆய்வாளர் Prof Madya Dr Mazlan Ali தெரிவித்துள்ளார்.
வெளியூர் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில், அதிக வாக்குப்பதிவு PH-க்கு கூடுதல் பலம் தரக்கூடும் என்று அவர் கூறினார்.
மத்திய அரசு நிலையில் காணப்படும் அரசியல் நிலைத்தன்மை, மேம்பட்டு வரும் பொருளாதார அறிகுறிகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் அரசாங்க உதவிகள் ஆகியவை PH ஆதரவாளர்களை வாக்களிக்க திரும்பச் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அவர் சொன்னார்.
நிதி உதவிகள், பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்கள் போன்ற அரசின் முயற்சிகளால் பயன் அடைந்த வாக்காளர்கள், தற்போதைய நிர்வாகத்தின் தொடர்ச்சியை விரும்பக்கூடும் என Mazlan Ali கூறினார்.
அவர்கள் அனுபவிக்கும் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசாங்க உதவிகள் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணம், PH ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பத்தை உருவாக்கும் என அவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



