சபா மாநிலத் தேர்தல்: நாளை 24,426 முன்கள வீரர்கள் வாக்களிப்பர்

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

கோத்தா கினபாலு, நவ. 24-

சபா மாநிலத்தின் 17-ஆவது மாநிலத் தேர்தல் வெப்பம் நாளுக்கு நாள் உச்சத்தில் இருக்கும் நிலையில், நாளை (நவம்பர் 25) 24,426 முன்கள பணியாளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

இவர்களில் 11,697 பேர் ராணுவ வீரர்களும் அவர்களது துணைவியரும் ஆவர். மீதமுள்ள 12,729 பேர் காவல்துறையினரும் அவர்களது துணைவியரும் ஆவர்.

மாநிலம் முழுவதும் 58 வாக்களிப்பு மையங்கள் காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் திறக்கப்படும். பின்னர் படிப்படியாக மூடப்படும்.

முக்கிய வாக்களிப்பு மையங்களில் சபா காவல்துறைத் தலைமையகம், மாவட்ட காவல்துறைத் தலைமையகங்கள், மாநிலம் முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் அடங்கும்.

கடந்த தேர்தல்களைவிட இம்முறை பதற்றமும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *