கவனத்தை ஈர்த்த டத்தோ ஶ்ரீ ரமணனின் வருகை! சபாவில் பேராதரவு!
- Tamil Malar (Reporter)
- 10 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோத்தா கினபாலு, நவ.
11-
பி.கே.ஆர். கட்சியின்
உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின்
சபா வருகை, இம்மாத
இறுதியில் நடைபெறவிருக்கும் சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு பலரின் கவனத்தை
ஈர்த்துள்ளது. கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் அவர்
வந்திறங்கியபோது, கட்சித்
தலைவர்கள், ஆதரவாளர்களால் "ரிபார்மாஸி"
முழக்கங்களுடன் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
இது சபா மண்ணில் பி.கே.ஆர். கட்சியின்
அசைக்க முடியாத போராட்ட உணர்வை வெளிப்படுத்தியது. ஒரு வாரத்தில் ரமணனின் இரண்டாவது வருகையாக இது அமைந்துள்ளது,
இது சபாவில்
கட்சியின் இயந்திரங்கள், தயார்நிலைக்கு மத்திய தலைமையின் உயர்
அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



