சபா தேர்தல்: “24 மணி நேரத்தில் எல்லாம் தலைகீழாக மாறலாம்” – பிகேஆர் உதவித் தலைவர் எச்சரிக்கை

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

கோத்தா கினபாலு, நவ. 21-

பக்காத்தான் ஹாராப்பான் தங்களது சில வேட்பாளர்கள் பிரபலமானவர்கள், வெற்றி உறுதி என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்று பிகேஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் எச்சரித்துள்ளார்.

சபா அரசியலின் உண்மை இதுதான். கடைசி 24 மணி நேரத்தில் எதுவும் தலைகீழாக மாறிவிடும். அதனால் நாம் கடினமாக உழைக்க வேண்டும். எந்தக் கட்சியிடம் கேட்டாலும் ‘நான் தோற்கப் போவதில்லை, நான் தான் ஜெயிப்பேன்’ என்று தான் சொல்வார்கள். ஆனால் இங்கு நிலவரம் அப்படி இல்லை என்று அவர் கூறினார்.

மொயோக் தொகுதி பக்காத்தான் வேட்பாளர் ரெமிஸ்தா ஜிம்மி தெய்லருடன் பிரச்சாரம் செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய ராமானன், இப்போது நமது இயந்திரம் (கட்சி இயந்திரம்) தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகிறோம். வாக்குகள் எதிரணிக்கு தாவாமல் தடுக்க வேண்டும். அதற்கு கட்சியின் ஒற்றுமையும், இடைவிடாத உழைப்பும் மிக முக்கியம் என்று வலியுறுத்தினார்.

சபாவில் அரசியல் நிலைமை மிகவும் நிலையற்றது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல் அலைகள் திடீரெனத் திசை மாறிவிடும். எனவே அதீத நம்பிக்கையை விட்டு, காலூன்றி உழைக்க வேண்டிய நேரம் இது என்று கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *