ஜொகூர் மாநிலத் தேர்தல் இப்போது முன்னுரிமை அல்ல – ஓன் ஹபிஸ் காஸி
- Surendran Sumdraraj
- 13 Mar, 2026
ஜொகூர் பாரு, மார்ச் 13-
ஜொகூர் மாநிலத்தில் முன்கூட்டியே மாநிலத் தேர்தல் (PRN) நடத்தப்படலாம் என்ற வதந்திகள் அதிகரித்து வரும் நிலையில், அது தற்போது தனது முக்கிய முன்னுரிமை அல்ல என்று ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
ஜொகூர் அம்னோ தலைவர் என்ற வகையிலும் , இப்போது தனது முழு கவனமும் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதிலும், அவர்களின் நலனைக் காக்கும் பணிகளிலும் இருப்பதாக கூறினார். அரசாங்கத்தின் பொறுப்பை உணர்ந்து மக்கள் நலனுக்காகச் செயல்படுவதே தன்னுடைய முதன்மை நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
மாச்சாப் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அவர், ஜொகூர் மாநில அரசின் தற்போதைய ஆட்சி காலம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் முடிவடையும் என நினைவூட்டினார். அதனால் தேர்தல் குறித்து இப்போது கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்களிடம் வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து செயல்படுவது தான் அரசின் கடமை என்று அவர் வலியுறுத்தினார். தேர்தலை முன்னிட்டு அரசியல் லாபம் தேடுவது அல்ல, மாறாக மக்களின் நலனையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்காகவே அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



