Johor தேர்தலில் PERIKATAN அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு!
- THINAGAREN SANGGAREN
- 11 Jul, 2026
ஜூலை 11,
Johor மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெரிக்காதான் போட்டியிட்ட 33 சட்டமன்றங்களிலும் பின்னடைவில் உள்ளது. மாலை 5 மணியுடன் வாக்குச்சாவடிகள் நிறைவு பெற்றதும், 5.35 மணிக்கு வாக்குகள் எண்ண தொடங்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மாலை 7 மணி வரையிலான நிலவரப்படி பெரிக்காதான் போட்டியிட்ட 33 சட்டமன்றங்களில் அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது.
பாரிசான் 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பக்கத்தான் 7 சட்டமன்றங்களில் முன்னிலை வகித்து வருகிறது. RAFIZI தலைமையிலான BERSAMA கட்சி 15 சட்டமன்றங்களில் போட்டியிட்டாலும் 10 சட்டமன்றங்களில் இறுதி இடத்தை பிடித்துள்ளது. இன்றைய JOHOR மாநிலத் தேர்தலில் 67.44% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆண்டு நடைபெற்ற JOHOR மாநிலத் தேர்தலில் 53.13% மட்டுமே வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



