மகாதீர் தேர்தலில் போட்டியிடுகிறாரா? PEJUANG கட்சி அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 13,

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தோற்றுவித்த PEJUANG கட்சி நெகிரி செம்பிலான் தேர்தலில் தனித்து போட்டியிடும் என பெஜுவாங் கட்சியின் தலைவரும் மகாதீரின் மகனுமான Datuk Seri Mukhriz Mahathir இன்று தெரிவித்தார். 2022 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத பெஜுவாங் கட்சி மற்ற கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளதாகவும் இப்போது பெஜுவாங் கட்சி நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சில சட்டமன்றங்களில் போட்டியிடும் என்றும் Datuk Seri Mukhriz Mahathir தெரிவித்தார். 

பொஜுவாங் கட்சியின் தோற்றுநரான முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் வயது மூப்புக் காரணமாக ஓய்வில் இருக்கிறார். தீவிர அரசியலில் மகாதீர் ஈடுபட வேண்டும் என நானும் விரும்புகிறேன். ஆனால் அவருடைய உடல் ஒத்துழைக்குமா என்கிற கேள்வியும் எங்களுக்கு இருக்கிறது என்பதால் ஜொகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பெஜுவாங்கிற்கு ஆதரவாக மகாதீர் களம் இறங்கலாம் என Datuk Seri Mukhriz Mahathir தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *