ஜொகூர் தேர்தலில் பி.கே.ஆர் அம்னோவுடன் இணையுமா?
- Thinagaren Sanggaren
- 29 Aug, 2025
ஆகஸ்ட் 29,
ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆரும் அம்னோவும் இணைந்து போட்டியிடுமா என்பதற்கான பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் பி.கே.ஆரின் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு விட்டதாகவும் வேட்பாளர்கள் மீதான நம்பிக்கைகள் குறித்து கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜொகூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் Faezuddin Puad தெரிவித்துள்ளார். இது ஒரு வழக்கமான அரசியல் வியூகம் மட்டுமே என்றும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கு இந்த கலந்துரையாடல்கள் வழிவகுக்கும் என்றும் Faezuddin Puad தெரிவித்தார்.
56 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் ஜொகூரில் 2022 ஜனவரி நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் 40 சட்டமன்றங்களில் வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையில் Onn Hafiz Ghazi தலைமையில் ஆட்சியை அமைத்தது. அப்போதைய பக்காத்தான் கூட்டணி 12 சட்டமன்றங்களில் வெற்றிப்பெற்று எதிர்கட்சியாகவும் பெரிக்காத்தான் 3 சட்டமன்றங்களையும் மூடா கட்சி 1 சட்டமன்றத்திலும் வெற்றிப் பெற்றிருந்தது. இந்த நிலையில் அடுத்த ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் 2027 ஜனவரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னமே நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



