தேர்தலில் தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்! Zahid Hamidi எச்சரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 05 Jul, 2026
ஜூலை 5,
JOHOR மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் பக்கத்தான் தனித்து போட்டியிடுவதால் தனிப்பட்ட தாக்குதலை நடத்தி ஒற்றுமை கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் என துணைப் பிரதமரும், பாரிசான் தலைவருமான DATUK SERI AHMAD ZAHID HAMIDI வலியுறுத்தினார். பாரிசான் ஆதரவாளர்கள் பக்கட்டானையும், பக்கத்தான் ஆதரவாளர்கள் பாரிசானையும் தாக்கி பொது மேடைகளில் பிரச்சாரம் செய்வது பக்குவமான அரசியலை முன்னெடுக்காது என ZAHID HAMIDI தெரிவித்தார்.
Johor தேர்தலை அடுத்து நெகிரி செம்பிலான் தேர்தலிலும் இந்த நிலை தொடரும் எனில் அது பக்கத்தான் பாரிசான் கூட்டணிக்கு ஆபத்து என்றும், அரசாங்கத்தையும் அது பாதிக்கும் என ZAHID HAMIDI நினைவூட்டினார். தனிப்பட்ட தாக்குதலை முன்னெடுக்கும் கட்சியை மக்கள் நிராகரிப்பார்கள். வேட்பாளரின் தொழில் திறன், தகுதி, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்ய பாரிசான் முயற்சிக்கும். இதே முயற்சி பக்கட்டானிலும் இருக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக துணைப் பிரதமரும், பாரிசான் தலைவருமான DATUK SERI AHMAD ZAHID HAMIDI கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



