சபா தேர்தலில் 41 சட்டமன்றங்களில் மட்டுமே போட்டியிடும் பெரிக்காத்தான்!
- Thinagaren Sanggaren
- 11 Nov, 2025
நவம்பர் 11
சபாவின் 17 ஆவது மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பெரிக்காத்தான் 41 சட்டமன்றங்களில் மட்டுமே போட்டியிடுவதாகப் பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். 73 சட்டமன்றங்களைக் கொண்ட சபா மாநிலங்கவையில் பெரிக்காத்தான் 41 சட்டமன்றங்களில் அதன் வெற்றியை உறுதிச் செய்து பெரும்பான்மையின் அடிப்படையில் சபா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என Tan Sri Muhyiddin Yassin நம்பிக்கை தெரிவித்தார். பெரிக்காத்தானின் உறுப்புக் கட்சிகளான பெர்சச்த்து, பாஸ், கெராக்கான் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் நிலையில் புனிதனின் MIPP கட்சி சபா தேர்தலில் போட்டியிடவில்லை.
பாஸ் கட்சியிலிருந்து 5 வேட்பாளர்களும் கெராக்கான் கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களும் பெர்சத்துவிலிருந்து 33 வேட்பாளர்களும் என மொத்தம் 41 சட்டமன்றங்களில் பெரிக்காத்தான் சின்னத்தில் தேர்தலைச் எதிர்கொள்வோம் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். பெரிக்காத்தான் போட்டியிடவிருக்கும் 41 சட்டமன்றங்களிலும் அதன் வெற்றிக்கு 80% வாய்ப்பு இருப்பதால் நம்பிக்கையுடன் பெரிக்காத்தான் தேர்தலை எதிர்கொள்ளும் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். சபா மாநிலத் தேர்தலில் 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய Tan Sri Muhyiddin Yassin மேலும் ஒரு சட்டமன்ற வேட்பாளரை விரைவில் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



