அரசியல் கட்சிகளுக்கு அபாய எச்சரிக்கை! சபா தேர்தலில் டெபாசிட்டை இழந்த 389 வேட்பாளர்கள்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 30,

நேற்று 29 நவம்பர் நடைபெற்று முடிந்த 17 ஆவது சபா மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளால் பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்திருப்பது மக்கள் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையை இழந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக டி.ஏ.பி கட்சி போட்டியிட்ட 8 சட்டமன்றங்களில் ஒரு சட்டமன்றத்தில் கூட வெற்றி பெறாமல் அனைத்து சட்டமன்றங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பி.கே.ஆர் போட்டியிட்ட12 சட்டமன்றங்களில் 1 சட்டமன்றத்தில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. பெரிக்காத்தான் கூட்டணி 42 சட்டமன்றங்களில் போட்டியிட்டும் 1 சட்டமன்றத்தில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. 

சபாவின் 17 ஆவது மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தலில் 73 சட்டமன்றத்திற்குப் பல்வேறு கட்சிகளிலிருந்து மொத்தம் 600 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் மொத்தம் 389 வேட்பாளர்கள் குறைந்தப்பட்ச வாக்குகளைக் கூட பெறாமல் தங்கள் டெப்பாசிட்டை இழந்துள்ளது. சபா மட்டுமன்றி இதுவரையிலும் நடைபெற்ற தேர்தல்களில் அதிகமான வேட்பாளர்கள் டெப்பாசிட்டை இழந்திருப்பது இதுவே முதல் முறை என்ற போதிலும் இது மக்கள் அரசியல்வாதிகள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *