லங்காவிக்கு எல்ஆர்டி, எம்ஆர்டி திட்டங்கள் தேவையற்றவை!
- Muthu Kumar
- 20 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 20-
பெருநிலத்திற்கும் லங்காவிக்கும் இடையில்
எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டி ரயில் சேவைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எந்த ஒரு பரிந்துரையையும் அரசாங்கம் பரிசீலிக்காது செலவு அதிகமாக இருக்கும் என்பதோடு தூரமும் அதிகம் என்பதால், கடலைக் கடந்து செல்லும் இந்தகைய ரயில் சேவை பரிந்துரை அபத்தமான ஒன்று என்று. போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
கோல கெடாவுக்கும் லங்காவிக்குமான கடல் மார்க்கமான தூரம் சுமார் 50 கிலோ மீட்டர் என்றும் கோல பெர்லிசிலிருந்து குவாவுக்கு சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் என்றும், மக்களவையில் லோக் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
"கோல கெடா அல்லது கோல் பொலிசிலிருந்து லங்காவிக்கு எல்ஆர்டி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை அபத்தமானது. "கோல பொலிசிலிருந்து லங்காவிக்கு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைப்பதென்று முடிவு செய்தால், அதற்கு எவ்வளவு பெரிய தொகை தேவைப்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று, 13ஆவது மலேசியத் திட்ட தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து பேசியபோது லோக் தெரிவித்தார்.
இதற்கு மாறாக, தற்போது நடப்பில் இருந்து வரும் கோல கெடா மற்றும் கோல பெர்லிஸ் துறைமுகத்திலிருந்து லங்காவிக்கான கடல் போக்குவரத்து வசதியை அரசாங்கம் மேம்படுத்தும் என்று அவர் கூறினார். "கோல கெடா. கோல பெர்லிஸ் மற்றும் லங்காவிக்கு இடையிலான ஃபெர்ரி போக்குவரத்து தொடர்பை அதிகரிப்பதற்கான மற்றொரு திட்டத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.
அதிநவீன ஃபெர்ரியை சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று லோக் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



