மலேசியா–தாய்லாந்து ரயில் இணைப்பு திட்டம்: வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்கு புதிய ஊக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 10-

கிளந்தான் மாநிலத்தின் ரந்தாவ் பாஞ்சாங் மற்றும் பாசிர் மாஸ் பகுதிகளை தாய்லாந்தின் சுங்கை கோலோக் (நராத்திவாட்) நகரத்துடன் இணைக்கும் ரயில் சேவை திட்டம், இரு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்திற்கான மலேசிய தூதர் டத்தோ ஸ்ரீ வான் சைதி வான் அப்துல்லா, இந்த திட்டம் தற்போது மலேசிய அரசின் பரிசீலனையில் இருப்பதுடன், செயல்படுத்தப்பட்டால் விநியோக சங்கிலியை வலுப்படுத்தி, பொருட்களின் நகர்வை எளிதாக்கும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தாய்லாந்து ஏற்கனவே சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தொடங்கியுள்ளது. இது அந்நாட்டின் இரட்டை ரயில் பாதை விரிவாக்கத் திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.

இந்த இணைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், எல்லை தாண்டிய சரக்கு போக்குவரத்து திறன் மேம்பட்டு, லாஜிஸ்டிக் செலவுகள் குறையவும், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோசீனா நாடுகளுக்கிடையேயான பொருட்கள் அனுப்பும் காலம் வேகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *