பாஸ் கட்சியின் முன்மொழிவு முகைதீனை ஓரங்கட்டும் நுட்ப நடவடிக்கை!- PKR இளைஞர் தலைவர் கருத்து

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, செப் 24: பிரதமருக்கு 70 வயது வரம்பை நிர்ணயிக்கும் பாஸ் கட்சியின் முன்மொழிவு, பெரிகாத்தான் நேஷனலின் (பிஎன்) பிரதமர் வேட்பாளராக டான் ஸ்ரீ முகைதீன் யாசினை ஓரங்கட்டுவதற்கான ஒரு நுட்பமான நடவடிக்கையே என்று பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது கமில் அப்துல் முனிம் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது வயதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், அது முக்கிய அளவுகோலாக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

அந்த முன்மொழிவு ஒரு பரிந்துரை மட்டுமே. முன்பு, 90 வயதுக்கு மேற்பட்ட ஒரு பிரதமர் இருந்தபோது, ​​அத்தகைய திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

வயது ஒரு காரணியாக இருக்கலாம், ஆனால் ஒரு தலைவருக்கான உண்மையான அளவுகோல்கள் புத்திசாலித்தனம், உடல் தகுதி, திறம்பட ஆட்சி செய்யும் திறன் மற்றும் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் புரிந்துகொள்வது என்று அவர் சுட்டிக்காட்டினார். அதுதான் இப்போது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாஸின் திட்டம் அரசியல் ரீதியாக முக்கியமான நேரத்தில் வருகிறது, ஏனெனில் PN இன்னும் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை ஆலோசித்து வருகிறது. அடுத்த பிரதமராக யார் இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதத்தில் இருக்கிறது. எனவே, இது டான்ஸ்ரீ முகைதீன் யாசினை நிராகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

வெளிப்ப்டையாக எங்களுக்கு முகைதீன் வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக வயது விவகாரத்தை ஒரு  பிரச்சினையாக வடிவமைக்கிறார்கள் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *