தேர்தல் கூட்டணிக்கு சிறிய கட்சியையும் அழைக்கிறேன்! புதிய வியூகம் வகுத்த முகைதீன்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 6,

அடுத்த பொதுத்தேர்தலில் பெரிக்காத்தானுடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற விருப்பம் உள்ள அரசியல் கட்சிகள் தாராளமாகப் பெரிக்காத்தானை அணுகலாம் என பெரிக்காத்தான் தலைவர் Muhyiddin Yassin அறிவித்தார். பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் அரசியல் கட்சிகளுக்குப் பெரிக்காத்தானின் உறுப்புக் கட்சிகள் ஆதரவளுக்கும் என்பதைப் பெரிக்காத்தான் தலைமை உறுதிப்படுத்தும் என Muhyiddin Yassin தெரிவித்தார். 

கூட்டணியில் இணையாமல் ஆதரவாளராக இருக்க விரும்பு அரசியல் கட்சிகளையும் பெரிக்காத்தான் அரவணைக்க விரும்புவதாக Muhyiddin Yassin தெரிவித்தார். ஒரு சில சிறிய கட்சிகள் குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் வாக்கு வங்கிகளைக் கொண்டிருந்தால் அவர்கள் பெரிக்காத்தானின் இணை பங்காளிகளாக இணைத்துக்கொண்டு அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பெரிக்காத்தான் அதன் வேட்பாளரை நிறுத்தாது என்றும் பெரிக்காத்தான் ஆதரவாக இருக்கும் என்கிற புதிய வியூகத்தைப் பெரிக்காத்தான் கொண்டிருப்பதாக Muhyiddin Yassin தெரிவித்தார். இந்த புதிய வியூகத்தை ஒரு சில கட்சிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அப்படியான கட்சிகளே பெரிக்காத்தானுடன் இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என Muhyiddin Yassin தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *