பொதுத்தேர்தலுக்கு RM 60 மில்லியன் தேவை! யார் கொடுப்பது? பாஸ் கட்சியின் சனூசி கேள்வி!
- Thinagaren Sanggaren
- 16 Sep, 2025
செப்டம்பர் 16,
அடுத்த 16 ஆவது பொதுத்தேர்தலின் செலவுகளை ஏற்க பாஸ் கட்சி இப்போதே செயல்பட வேண்டும் என பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநரும் கெடா மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Sanusi Muhammad Nor வலியுறுத்தினார். கடந்த பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி வெற்றிப் பெற்ற நாடாளுமன்றங்களைத் தக்க வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு நாடாளுமன்றத்திற்கு RM 1 மில்லியன் செலவு செய்தாக வேண்டும் என Datuk Seri Sanusi Muhammad தெரிவித்தார். அப்படியானால் புதிய நாடாளுமன்றங்களை வெல்ல எவ்வளவு பெரிய நிதி தேவைப்படும் என்பதை நாம் உணர்ந்து அதற்கான நிதி திரட்டல் நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என Datuk Seri Sanusi Muhammad பாஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
அடுத்த பொதுத்தேர்தலில்
பாஸ் கட்சிய் குறைந்தபட்சம் 60 நாடாளுமன்றங்களில்
வெற்றியை உறுதிச் செய்யும் நோக்கத்துடன் இருப்பதால் குறைந்தபட்சம் RM 60 மில்லியன் ரிங்கிட் நிதி
தேவைப்படும் என Datuk Seri Sanusi Muhammad தெரிவித்தார். உறுப்பினர்களிடமிருந்தும்
ஆதரவாளர்களிடமிருந்தும் பெறும் நிதி சிறிய அளவில் மட்டுமே இருப்பதால் அதை நம்பி நாம்
இருக்க முடியாது. இப்போதே நிதி திரட்டலுக்கானச் செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
என பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநரும் கெடா மாநில மெந்திரி பெசாருமான Datuk
Seri Sanusi Muhammad Nor பாஸ் கட்சியினருக்கு வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



