ஓப்ஸ் சம்செங் ஜாலானான்-போக்குவரத்து போலீஸ்காரர் தடம் புரண்டு மரணம்!
- Muthu Kumar
- 29 Jun, 2025
(நமது நிருபர்)
கோலாலம்பூர், ஜூன் 29-
தலைநகரைச் சுற்றிலும் ஒப்ஸ் சம்செங் ஜாலானான் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது விபத்துக்குள்ளாகி போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் மரணமுற்றார்.
நேற்று அதிகாலை 4.40 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் லான்ஸ் காப்பரல் முகமட் முகமட் அமிருல் அய்மான் முகமட் ஒஸ்மான், (வயது 24) என்பவர் மரணமுற்றதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து விசாரணை துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார்.இவர் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்குத் தொடங்கப்பட்ட 2ஆம் கட்ட ஒப்ஸ் சம்செங் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகி மரணமுற்றார்.
சம்பவத்தின் போது இவர் மற்றொரு போலீஸ்காரருடன் சாலை அடாவடித்தனம் செய்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் பின்னால் துரத்திச் சென்றார். ஜாலான் துன் ரசாக்கிலிருந்து ஜாலான் கூச்சிங்கிற்கு வந்த போது சாலை ஈரமாக இருந்ததில் மோட்டார் சைக்கிள் தடம் புரண்டதாக கோலாலம்பூர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய போது ஏசிபி முகமட் ஸம்ஸுரி முகமட் இசா குறிப்பிட்டார்.
Seorang anggota polis trafik maut ketika menyertai operasi Ops Samseng Jalanan di Kuala Lumpur. Lans Koperal Muhammad Amirul Aiman Osman, 24, terbabas motosikal ketika mengejar suspek di Jalan Kuching akibat jalan licin, lalu meninggal dunia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



