PSM அருள் நள்ளிரவில் விடுதலை!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 21,

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக PSM கட்சியின் துணைத் தலைவர் அருள்செல்வன் கைது செய்யப்பட்டதை அடுத்து இன்று நள்ளிரவு அவர் விடுதலை செய்யப்பட்டார். நேற்று மாலை 6 மணிக்குக் காவல் நிலையத்தில் அருள்செல்வன் மீது காவல்துறையின் விசாரணை மேற்கொண்டதை அடுத்து அவரைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் PSM கட்சியினர் காவல் நிலையத்தின் வாசலை முற்றுகையிட்டு அமைதி மறியலில் மெழுகுவர்த்தியுடன் கூடினர். PSM அருள் மீதானக் கைதிற்கு எந்தவொரு முகாந்தாரமும் இல்லை என PSM கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அவர் நள்ளிரவு 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்கள் வீடமைப்புப் பிரச்சனைகள் குறித்து சுமார் 100 தோட்டத்தொழிலாளர்களுடன் நாடாளுமன்ற வாசலில்  PSM கட்சியின் அமைதி மறியலில் ஈடுபட்ட போது தோட்டத் தொழிலாளர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் அருள்செல்வன் கீழே விழுந்தார். இது சர்ச்சையாகிய நிலையில் PSM கட்சியின் துணைத் தலைவர் அருள்செல்வனுக்கு எதிராகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *