பெரிக்காத்தானை வீழ்த்திய பவானி!

top-news

ஏப்ரல் 27,

AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலில் PSM கட்சியின் வேட்பாளர் முக்கியமான 3 வாக்குச்சாவடிகளில் எதிர்க்கட்சியானப் பெரிக்காத்தானை விடவும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் 1,106 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பவானி பிடித்திருந்தாலும் 3 முக்கியச் சாவடிகளில் கணிசமான வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். BANIR UTARA வாக்குச் சாவடியில் பெரிக்காத்தான் 22 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் பவானி 39 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

COLDSTREAM வாக்குச்ஞாவடியில் பெரிக்காத்தான் 23 வாக்குகள் மட்டுமே பெற்றநிலையில் பவானி 66 வாக்குகளைப் பெற்றுள்ளார். தென் ஆயேர் கூனிங்கில் பெரிக்காத்தான் 31 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் பவானி 107 வாக்குகளைப் பெற்றுள்ளார். சம்மந்தப்பட்ட 3 வாக்குச்சாவடீகளும் இந்தியர்களையும் சீனர்களையும் அதிகம் கொண்டிருக்கும் வாக்குச்சாவடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dalam PRK Ayer Kuning, calon PSM Bhavani mencipta kejutan apabila memperoleh undian lebih tinggi daripada Perikatan Nasional di tiga pusat mengundi utama yang majoritinya pengundi India dan Cina, walaupun secara keseluruhan beliau di tempat ketiga dengan 1,106 undi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *