மதுரை மத்தியில் கடும் போட்டி – வளர்ச்சி சாதனையை முன்வைத்தார் பி.டி.ஆர்
- Surendran Sumdraraj
- 07 Apr, 2026
மதுரை, ஏப். 7-
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க கூட்டணி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், தி.மு.க சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார்.
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஒரு அரசு மீண்டும் மக்கள் முன் நிற்கும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை விளக்குவது முக்கியம் எனத் தெரிவித்தார்.
“கல்வி, நல்வாழ்வு, தொழில்மயமாக்கல் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில், முந்தைய 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் சராசரி வளர்ச்சியை (CAGR) விட, கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்,” என்று அவர் கூறினார்.
மேலும், தற்போதைய ஆட்சி மக்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியில் இரு முக்கிய கட்சிகளின் நேரடி மோதல் தேர்தல் சூழலை அதிகரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



