சென்னை–பினாங்கு நேரடி விமான சேவை
- Tamil Malar (Reporter)
- 28 Jan, 2026
ஜார்ஜ்டவுன், ஜன. 28-
இந்தியா–பினாங்கு இடையிலான அனைத்துல விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்த பினாங்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை–பினாங்கு நேரடி விமான சேவையின் சிறப்பான செயல்திறனைத் தொடர்ந்து, இந்தியாவின் இன்னொரு நகரத்திலிருந்துப் பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்குவதற்கான முன்மொழிவு தற்போது பரிசீலனையில் உள்ளது.
மாநில சுற்றுலா, படைப்பாற்றல் பொருளாதாரக் குழு தலைவர் வோங் ஹொன் வை, சென்னை பயணத்தின் போது IndiGo Airlines நிறுவனத்துடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். அந்தச் சந்திப்புகளில், IndiGo Airlines துணை விற்பனை இயக்குநர் ஸ்ரீநிவாசன் ஜெயசீலனுடன் நேரடி பேச்சுவார்த்தையும் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
“சென்னைக்கு அடுத்ததாக, இந்தியாவின் இன்னொரு முக்கிய நகரத்தை பினாங்குடன் நேரடியாக இணைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. தேவையான ஏற்பாடுகள், விவரங்கள் இறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பினாங்கு மாநில அரசும் IndiGo Airlines நிறுவனமும் இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



