பினாங்கில் நிலவரி தள்ளுபடி 50 சதவீதமாக உயர்வு

top-news

ஜார்ஜ்டவுன், டிச. 23-

பினாங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டம் (MMK), 2026ஆம் ஆண்டுக்கான நிலவரி தள்ளுபடியை (rebat) முந்தைய 32.5 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இது நில உரிமையாளர்களின் சுமையை குறைக்கவும், புதிய நிலவரி விகிதத்திற்கான மாற்றத்தை படிப்படியாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதலமைச்சர் சௌ கொன் இயோ, இந்த நிலவரி தள்ளுபடி குறைந்தபட்ச விகிதத்திற்கு உட்பட்டது என்றும், புதிய நிலவரி விகிதம் தேசிய நிலக் கோட்பாட்டின்படி குறைந்தது 10 ஆண்டுகளாவது தொடரும் என்றும் தெரிவித்தார்.

"தள்ளுபடிக்குப் பிறகு நிலவரி தொகை முந்தைய ஆண்டின் தொகையைவிட குறைவாக இருந்தால், முந்தைய ஆண்டின் தொகைதான் பொருந்தும். இந்த அணுகுமுறை நில உரிமையாளர்களின் நலனுக்கும் மாநில வருவாய்த் தேவைக்கும் இடையே சமநிலையை உறுதிப்படுத்தும்" என்று அவர் கூறினார்.

இது குறித்து இன்று கொம்தாரில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசினார். இந்த முடிவு, நில உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மாநில அரசின் நிதி நிலைத்தன்மையைப் பேணுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *