பஹ்ரைனில் ஈரான் ட்ரோன் தாக்குதல் – 32 பேர் காயம்

top-news
FREE WEBSITE AD

மனாமா, மார்ச் 9-

பஹ்ரைனின் சித்ரா தீவை குறிவைத்து ஈரான் மேற்கொண்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் 32 பேர் காயமடைந்ததாக அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும், மத்திய கிழக்கில்  அதிகரித்து வரும் பதற்றத்தின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

பஹ்ரைன் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், காயமடைந்தவர்கள் அனைவரும் பஹ்ரைன் குடிமக்களே என்றும், அவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தது. காயமடைந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“காயமடைந்தவர்களில் 17 வயது சிறுமி ஒருவர் தலை மற்றும் கண் பகுதியில் கடுமையான காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு மாதம் வயதுடைய ஒரு குழந்தையும் காயமடைந்துள்ளது,” என்று அமைச்சு தெரிவித்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *