MiPP புனிதன் பொய்க்காரர்! கட்சியில் உறுப்பினரே இல்லை! புனிதனுக்கு எதிராகக் கட்சியின் தோற்றுநர் புகார்!
- Thinagaren Sanggaren
- 31 Oct, 2025
அக்தோபர் 31,
பெரிக்காத்தானின் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPPயின் தலைவரான புனிதன் பொய்க்காரர் என்றும் கட்சித் தேர்தலை முறையாக நடத்தாமல் போலி உறுப்பினர்களைக் கொண்டு MIPP கட்சியை நடத்தி வருவதாகவும் அக்கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான பேராசிரியர் சேகர் தெரிவித்தார்.
கட்சியைத் தோற்றுவித்த நான் சொல்கிறேன். புனிதன் Mipp எனும் மலேசிய இந்திய மக்கள் கட்சியில் உறுப்பினரே கிடையாது என பேராசிரியர் சேகர் அறிவித்தார். ROSஇல் பதிவு செய்யப்பட்ட 30 தலைமை உறுப்பினர்களின் பட்டியலில் புனிதன் கிடையாது என்றும் டக்டர் சேகர் தெரிவித்தார்.
MIPP கட்சியில் 30 தலைமை உறுப்பினர்களும், 40 உறுப்பினர்களும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர் அல்லாதவர்களை வைத்துக் கொண்டு MIPP கட்சியின் தேர்தலைக் கடந்த அக்தோபர் 5 நடத்தி தன்னைத் தாமே தலைவராகப் புனிதன் நியமித்துக் கொண்டார், புனிதனை நம்பி அவரிடம் கட்சியை ஒப்படைத்தேன். கட்சியைத் துரோகத்தால் சீரழித்து விட்டதாகவும் பேராசிரியர் சேகர் சாடினார்.
MiPP கட்சியின் கணக்குகள், அதன் தலைமைப் பொறுப்புகளுக்கான நியமனங்கள், ஆவணங்கள் என பல்வேறு பிரச்சனைகள் கடந்த 2 ஆண்டுகளாக இருப்பதாகவும் இதை புனிதன் கண்டுக்கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததாகவும் இது தொடர்பாகச் சங்கங்கள் பதிவு இலாகாவான ROSஇல் முறையாகப் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் MIPP கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் தெரிவித்தார்.
கட்சித் தலைவராக இருப்பதற்குப் புனிதனுக்குத் தகுதியே இல்லை. பெயர் மட்டும் தான் புனிதன். ஆனால் கெட்டவர். கட்சியின் தோற்றுநரான என்னையே ஒதுக்கிவிட்டு புனிதன் கட்சிய நடத்துகிறார் என தோற்றுநரும் முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் கடுமையாகச் சாடினார். புனிதன் MiPP கட்சி விதிகளையும் ROS விதிகளை மீறியிருப்பதாகச் சங்கங்கள் பதிவு இலாகாவான ROSஇல் புகார் அளித்திருக்கிறேன். RoS இது குறித்து தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என டாக்டர் சேகர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



