மலேசியாவில் கூகுள் தரவு மையம்: 2030க்குள் 12.43 பில்லியன் பொருளாதார பலன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 26-

மலேசியாவில் உருவாக்கப்பட்டு வரும் Google நிறுவனத்தின் முதல் தரவு மையம் 2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க டாலர் 3.2 பில்லியன் (12.43 பில்லியன்) பொருளாதார வருவாயை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டம் மூலம் 26,500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரின் எல்மினா வணிகப் பூங்காவில் (Elmina Business Park – EBP) அமைக்கப்பட்டு வரும் இந்த திட்டம் குறித்து பிரதமர்  தகவல் பகிர்ந்துள்ளார். அவர், Alphabet & Google நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதலீட்டு அதிகாரியான Ruth Porat அவர்களுடன் காணொலி கலந்துரையாடல் நடத்தியதாகத்  தெரிவித்தார்.

மே 2024இல் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டாலர் 2 பில்லியன் (7.06 பில்லியன்) முதலீட்டு திட்டம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக முன்னேறி வருவதாகவும், அதன் செயல்பாடு திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த முதலீடு மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதோடு, உயர் திறன் தொழில்நுட்ப துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *