கெப்போங் கேளிக்கை மையத்தில் 107 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 01 Mar, 2026
மார்ச் 1,
தேசிய குடிநுழைவுத் துறை கெப்போங்கில் உள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 107 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்துள்ளது. நேற்றிரவு 11 மணிக்குத் தேசியக் குடிநுழைவுத் துறையுடன் சிலாங்கூர் மாநில அமலாக்க அதிகாரிகளும் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாடிகள் கொண்ட சொகுசு வணிக வளாகத்தில் கேளிக்கை மையம் எனும் பெயரில் பாலியல் சேவைகள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
சோதனையின் போது 171 வெளிநாட்டினர்களும் 53 உள்ளூர்வாசிகளும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் அதில் Thailand, Vietnam, Bangladesh, Laos ஆகிய நாடுகளைச் சேர்ந்த 107 பெண்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் 11 Bangladesh ஆடவர்கள் கோளிக்கை மையத்தின் பாதுகாவலர்களாகச் செயல்பட்ட குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கோளிக்கை மையம் நள்ளிரவுகளில் பாலியல் சேவைகள் வழங்கும் தளமாகச் செயல்படுவதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். கேளிக்கை மையத்திலிருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



