உலகக் கோப்பை கால்பந்து சூதாட்ட மையத்தில் அதிரடி சோதனை; 34 பேர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 6 –

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மையமாகக் கொண்டு சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதாக நம்பப்படும் அழைப்பு மையம் மற்றும் உரிமம் இல்லாத பொழுதுபோக்கு மையம் மீது போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறுகையில், செந்தூல், தாமான் வாஹ்யூ பகுதியில் அமைந்திருந்த அந்த வளாகத்தில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையை செந்தூல் மாவட்ட காவல் தலைமையக குற்றப் புலனாய்வுத் துறையின் சூதாட்டம், ஒழுக்கக்கேடு மற்றும் கும்பல் தடுப்புப் பிரிவு (D7) மேற்கொண்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 33 வெளிநாட்டினரும், ஒரு மலேசியப் பெண்ணும் அடங்குவர். வெளிநாட்டவர்களில் 28 சீனர்கள், மூன்று மியான்மர் ஆண்கள், ஒரு தென்கொரிய ஆண் மற்றும் ஒரு தாய்லாந்து பெண் உள்ளனர். இவர்களின் வயது 20 முதல் 40 வயதுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த மையம் உலகக் கோப்பை கால்பந்து சூதாட்ட நடவடிக்கைகளுக்கான அழைப்பு மையமாகவும், உரிமம் இல்லாத பொழுதுபோக்கு மையமாகவும் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதால், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *