22 கேளிக்கை மையங்களில் 288 வெளிநாட்டினர்கள் கைது! டத்தோ M.குமார் அதிரடி!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 11,

புக்கிட் அமான் தேசிய குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற டத்தோ M.குமார் தலைமையிலான சிறப்புச் சோதனைக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் சிலாங்கூர் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கேளிக்கை மையங்களை அடையாளம் கண்ட சிறப்புப் படையின் ஒரே நேரத்தில் சோதனையை மேற்கொண்டதாக டத்தோ M.குமார் தெரிவித்தார். சிலான்கூரில் 16 கேளிக்கை மையங்களில் கோலாலம்பூரில் 6 கேளிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 288 பேர் கைது செய்யப்பட்டதாக டத்தோ M.குமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 170 பேர் வெளிநாட்டினர்கள் என்றும் 21 காவலர்கள் 26 தொழிலாளர்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாலியல் உல்லாசச் சேவைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் மியன்மாரைச் சேர்ந்த 66 பெண்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் 18 முதல் 51 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் நேப்பாளம் பங்களாதேஷ் ஆகிய நாட்டினர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டத்தோ M.குமார் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கேளிக்கை மையங்கள் வெளிநாட்டினர்களின் உதவியில் இயங்குவதாகவும் முறையான உரிமங்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வருவதாகவும் புக்கிட் அமான் தேசிய குற்றவியல் புலனாய்வுத் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதன் இயக்குநர் டத்தோ M.குமார் தெரிவித்தார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *