“புஷ்பா 2” கூட்ட நெரிசல் வழக்கு; காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான அல்லு அர்ஜுன்
- Surendran Sumdraraj
- 22 Jun, 2026
ஹைதராபாத், ஜூன் 22 –
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், அல்லு அர்ஜுன் இன்று காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானபோது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், அவரது மகன் காயமடைந்தார். இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்க நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அல்லு அர்ஜுனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி அவர் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையில் பங்கேற்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



