மருந்தகத்தில் மலைப்பாம்பு பெண் ஊழியரின் காலை கடித்தது!
- Shan Siva
- 24 Nov, 2025
ஷா ஆலம், நவ 24: ஷா ஆலமில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணிபுரியும் ஒரு
பெண் ஊழியரை நேற்று 2 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. கடையின் கழிப்பறையில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் பீதியில்
உறைந்தனர்.
சிலாங்கூர்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், சம்பந்தப்பட்ட 23 வயது பெண்ணை
மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவரது காலில் இருந்த
பாம்பின் பிடியிலிருந்து அவரை விடுவித்ததாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பிற்பகல்
3.46 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும்,
புக்கிட் ஜெலுத்தோங்
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு தீயணைப்பு வீரர்கள் மாலை 4.15
மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் துறை தெரிவித்தது.
பணியில் இருந்த
ஊழியர்கள் அவரது காலை கடித்த பாம்பை வெற்றிகரமாக அகற்றி, பாதிக்கப்பட்டவரை மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சு ஊழியர்களிடம்
ஒப்படைத்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



