கத்தார் எரிவாயு ஆலையில் விபத்து; 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

top-news
FREE WEBSITE AD

தோகா, ஜூன் 23 –

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையமான ராஸ் லபான் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு செயலாக்க ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட உடனேயே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடிய தொழிலாளர்களை தேடும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *