என் மகன் இஸ்லாத்திற்கு மாறியது தெரியாது! பெற்றோர்கள் வேதனை!
- THINAGAREN SANGGAREN
- 03 Mar, 2026
மார்ச் 3,
குர்-ஆனை காலால் மிதித்து அவமதித்த 21 வயது பல்கலைக்கழக மாணவர் இஸ்லத்திற்கு மதம் மாறியது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என கைது செய்யப்பட்ட 21 வயதான விக்னேஸ்வரனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் விக்னேவரன் எனும் அம்மாணவர் இந்து மதத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து இஸ்லாத்திற்கு மதம் மாறியதாகமத போதகரான FIRDAUS WONG தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் மாணவரின் தந்தை நீதிமன்ற விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு
வழங்கியதாகவும் எந்த வகையிலும் அவருடைய மகன் செய்த குற்றத்தைத் தற்காக்க விரும்பவில்லை
என்றும் வழக்கறிஞர் Muhammad
Amirull Afiqq தெரிவித்தார். ஆனால் அம்மாணவர் மதம் மாறியது
குறித்தான வழக்கு இது இல்லை என்பதால் இது குறித்து எந்தவொரு தகவலும் வெளியிட வேண்டிய
அவசியமில்லை என வழக்கறிஞர் Muhammad Amirull Afiqq விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



