அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு:மலேசிய இறையாண்மைக்கு பாதிப்பா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 29-

இம்மாதம் பாட்டில் மலேசியா தனது இறையாண்மையை விட்டுக் கொடுத்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள நாடாளுமன்ற சிறப்புக் குழுவொன்று26ஆம் தேதி அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக உடன் விசாரணை நடத்தவுள்ளது.சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தலைமையிலான அனைத்துலக உறவுகள் மற்றும் வர்த்தகம் மீதான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக்குழு அவ்விசாரணையை நடத்தும்.

அந்த வர்த்தக உடன்பாட்டினால் மலேசியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சியைத் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் உட்பட அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவலை தெரிவித்துள்ளனர் என்று வோங் சென் கூறினார்.இந்த விவகாரத்தை விரிவாக ஆராய்வதற்காக சிறப்புக்குழு விரைவில் கூடும். நாட்டின் இறையாண்மையையும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தையும் நிலைநிறுத்தும் கடமையும் தற்காக்கும் கடமையும் சிறப்புக் குழுவுக்கு உள்ளது என்றார் வோங்

மலேசிய நாடாளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் தேதி முற்பகல் 11மணிக்கு அக்குழுவின் விசாரணை நடைபெறும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

முன்னதாக, மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய ஹசான் கரீம், அமெரிக்காவுடன் மலேசியா அண்மையில் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்வியெழுப்பினார்.அந்த ஒப்பந்தமானது நாட்டின் இறையாண்மையை பலவீனப்படுத்தக்கூடிய "சரணடையும் நடவடிக்கை என்று அவர் வருணித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *