மனிதக் கடத்தல் கும்பல்கள் தொடர்பில் பட்டதாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
- Muthu Kumar
- 15 Nov, 2024
மலாக்கா, நவ.15-
குற்றச்செயல்கள் நோக்கத்திற்காகத் திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதக் கடத்தல் கும்பல்கள் தொடர்பில் தொழில்நுட்பத் திறன் பட்டதாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வியட்னாம், கம்போடியா, லாவோஸ் அல்லது மியன்மார் போன்ற நாடுகளில் தருவிக்கப்படும் வேலை வாய்ப்பு ஒரு முன்னெச்சரிக்கையாகும் என்பதால் மனிதக் கும்பல்களால் பாதிக்கப்படாமல் இருப்பதைத் தவிர்க்க வேலை வாய்ப்பைத் தேடுபவர்கள் அதைச் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸைன் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை தற்போது சவால்மிக்க மனிதக் கடத்தல் சம்பவங்களை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இதற்கு உயர்ந்த திறன் தேவைப்படா விட்டாலும் குறைந்தபட்சம் கணினி மற்றும் தொலைத்தொடர்பு முறை குறித்த அடிப்படைத் திறன் கொண்டவர்கள் இவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவர். அந்த வகையில் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களையும் இவர்கள் இலக்காய்க் கொண்டிருக்கின்றனர் என்று ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் எதிர்ப்பு அமலாக்கக் கருத்தரங்கின் நிறைவு விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸைன் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *