கோலாலம்பூரின் பல சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம்!
- Muthu Kumar
- 26 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 26-
இன்று "தூருன் அன்வார் பேரணியின் காரணமாக கோலாலம்பூரின் மையப் பகுதியில் உள்ள பல சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கமான வழிகளிலிருந்து திசை திருப்பப்படும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்.
வாகனப் போக்குவரத்து சீராக நடைபெறுவதையும் சாலைப் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கோலாலம்பூரின் இடைக்கால போலீஸ் தலைவர் யூசுப் ஜான் முகமது நேற்று கூறினார்.
ஜாலான் மஹாராஜாலேலா, ஜாலான் சைட் புத்ரா, ஜாலான் சினாபாலு, சுல்தான் முகமது, டத்தோ ஒன், ஜாலான் கூச்சிங், ஜாலான் கினாபாலு, ஜாலான் ஹிஷாமுடின், ஜாலான் பார்லிமெண்ட் ஜாலான் துவாங்கு அப்துல்
ரஹ்மான், லெபோ அம்பாங் ஆகிய சாலைகளும் அவற்றில் அடங்கும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மஸ்ஜிட் நெகாரா. பாசார் செனி, மஸ்ஜிட் ஜாமேக், கம்போங் பாரு. சோகோ பேரங்காடி ஆகிய ஐந்து இடங்களில் ஒன்று திரண்டு பின்பு அங்கிருந்து மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்படுவார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



