முக்கிய சாலைகளில் வாகன நெரிசல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 14: மலேசிய தினம் மற்றும் பள்ளி விடுமுறைக்காக கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து அதிகமான வாகனங்கள் வெளியேறியதால், நேற்று இரவு பல முக்கிய விரைவுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 9.41 மணி நிலவரப்படி MRR2 இலிருந்து கோம்பாக் டோல் பிளாசா வரை போக்குவரத்து மெதுவாக கிழக்கு நோக்கி நகர்ந்ததாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையமான LLM தெரிவித்துள்ளது.

கெந்திங் செம்பாவை நோக்கிய கோம்பாக் டோல் பிளாசாவிலும், புக்கிட் திங்கியிலிருந்து பெந்தோங் வரையிலும் இதேபோன்ற நிலைமை பதிவாகியுள்ளது.

வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில், ஜாசினிலிருந்து ஆயர் கெரோவிற்கும், பெடாஸ் லிங்கியிலிருந்து செனாவாங்கிற்கும் வடக்கு நோக்கிய போக்குவரத்து மெதுவாக இருந்தது.

தெற்கு நோக்கி, சிரம்பானில் இருந்து பெடாஸ் லிங்கி வரையிலும், செடெனாக்கிலிருந்து கூலாய் வரையிலும் நெரிசல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பழுதடைந்த டேங்கர் லாரியைத் தொடர்ந்து சிரம்பானில் இருந்து போர்ட் டிக்சன் வரையிலும் போக்குவரத்து மெதுவாக இருந்தது.

விடுமுறை நாட்களுக்கான உச்ச நாட்களில் அதன் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அளவு தினமும் 2.2 மில்லியன் வாகனங்களாக உயரும் என்று பிளஸ் மலேசியா முன்னதாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *