போக்குவரத்து சம்மன் 70 விழுக்காடு கழிவில் அபராதச் சீட்டுகளை உட்படுத்த முடியாது!
- Muthu Kumar
- 01 Nov, 2025
கோலாலம்பூர், நவ.1-
போக்குவரத்து சம்மன் கட்டண குறைப்பில் சாலைப் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைத் துறை தருவித்த 70 விழுக்காட்டுக் கழிவு அபராதம் விதிக்க முடியாத குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படாது.
அந்த கழிவு தருவிப்பில் குறைந்தபட்சம் வெ.30 மட்டுமே என்பதால் அது நடப்பு அபராத மதிப்பிற்குட்பட்டு வழங்கப்படுவதாக அத்துறையின் புக்கிட் அமான் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.சம்மன் செலுத்தும் விவகாரத்தை மைடிஜிட்டல் ஐடியில் பதிவு செய்த பயனீட்டாளர்கள் தேசிய போலீஸ் படையின் மைபாயார் தலம், அனைத்து மாவட்ட போக்குவரத்து முகப்புகள், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வாயிலாகச் செயல்படுத்தலாம்.
இந்த போக்குவரத்து சம்மன் கழிவு இன்று தொடங்கி வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று ஓர் அறிக்கையில் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



