எங்களை நீக்கினால் PKR பலவீனமாகும்! – மிரட்டும் RAFIZI!
- Thinagaren Sanggaren
- 17 Jul, 2025
ஜூலை 17,
அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் நீதித்துறையில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டிய என்னையும் 8 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பி.கே.ஆரின் தொகுதித் தலைவர்கள் சிலர் குற்றம் சுமத்தியிருப்பதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முன்னாள் அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். பி.கே.ஆரின் தொகுதித் தலைவர்கள் சிலர் எங்கல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் பி.கே.ஆர் தலைமைக்குப் புகார் அளித்திருப்பதாகப் பி.கே.ஆரின் பொதுச் செயலாளர் Fuziah Salleh தெரிவித்ததை RAFIZI சுட்டிக்காட்டினார்.
பி.கே.ஆரின் தொகுதித் தலைவர்களின் வலியுறுத்தலால் 9
பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கினால் கட்சிக்கு என்ன நன்மை? யாருக்காக எங்களை நீக்க வேண்டும்? எங்களை நீக்குவதால் பி.கே.ஆர் கட்சி பலவீனமாகுமே தவிர
எந்த பயனும் இல்லை என்பதை PANDAN நாடாளுமன்ற
உறுப்பினருமான Datuk Seri Rafizi Ramli நினைவூட்டினார். 9 நாடாளுமன்ற
உறுப்பினர்களை நீக்குவதால் ஒற்றுமைக் கூட்டணியிலிருக்கும் மற்ற அரசியல் கட்சிகளை
விடவும் பி.கே.ஆர் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் பலவீனமானக்
கட்சியாக இருக்கும் என Datuk Seri Rafizi
Ramli
நினைவூட்டினார். அன்வாரை விமர்சித்ததற்காக எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் PASIR GUDANG நாடாளுமன்ற
உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் மூத்த தலைவருமான Hassan Karim என்னை விடவும்
கடுமையாகப் பி.கே.ஆரின் தலைமையை விமர்சித்துள்ளார் என்பதையும் முன்னாள் அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள்
துணைத் தலைவருமான Datuk Seri
Rafizi Ramli நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



