ரபீசியுடன் 9 MP-க்கள் வெளியேறினாலும் ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை! – அம்னோ கருத்து!
- Thinagaren Sanggaren
- 15 Jul, 2025
ஜூலை 15
பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramli-க்கு ஆதரவளித்து 9 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் ஆட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான Datuk Seri Ahmad Maslan தெரிவித்தார். ஒற்றுமை கூட்டணியில் 153 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ரபீசி தலைமையில் 9 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகினாலும் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒற்றுமை கூட்டணியின் மடானி அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் என்றும் ஏனெனில் ஆட்சி அமைக்க 112 நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெரும்பான்மை இருந்தாலே போதும் என Datuk Seri Ahmad Maslan சுட்டிக்காட்டினார்.
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது எதிர்ப்பதும் ஒற்றுமை கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைமை எடுக்கும் முடிவு என்பதைப் பொதுத்தேர்தலில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்றும், இதனை பாரிசான் நேசனல் கூட்டணியைப் பிரதிநிதித்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு இருப்பதை மற்ற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என இன்று கோலா திரங்கானுவில் நடைபெற்ற மடானி ஆதரவாளர்கள் பேரணியில் (Santai Komuniti Madani) தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



