ரபீஸியின் மகன் மீதான தாக்குதல்! காவல்துறைக்கு அன்வார் வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 14 Aug, 2025
ஆகஸ்ட் 14,
முன்னாள் பொருளாதார அமைச்சரும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Rafizi Ramli மகன் தாக்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறையான விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். இது தொடர்பாகத் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution ஆகியோருடன் கலந்தாலோசித்ததாகவும் முழுமையான விசாரணையைச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தலைமையிலான சிறப்புப் பணிக்குழு விசாரித்து வருவதாகவும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
இந்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் உறுதியளித்த நிலையில் தாக்குதலுக்கான Datuk Seri Rafizi Ramli மகன் சிலாங்கூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar விளக்கமளித்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள ஒரு வணிகக் கடையின் வாசலில் பொதுமக்கள் இல்லாத பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது. நேற்றிரவு ரபீஸியின் மகன் சிகிச்சைக்குப் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் சம்மந்தப்பட்டிருப்பதாக இருவர் மீது காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



