நான் வேறு பாதையில்! அன்வார் வேறு பாதையில்! PKR எழுச்சிப் பெறாது! – Rafizi Ramli

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 19,

பி.கே.ஆரில் மீண்டும் தேசிய பொறுப்புகளில் தாம் ஈடுபடுவதற்கான எந்த சூழலும் இல்லை என பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். இப்போது பி.கே.ஆர் பயணிக்கும் பாதை வேறு நான் பயணிக்கும் பாதை வேறு என்பதால் மீண்டும் நான் பி.கே.ஆரின் தலைமைப் பொறுப்புகளில் இணைய வாய்ப்பில்லை என்றும் அன்வாரின் பாதை வேறு என்னுடைய பாதை வேறு என ஆகிவிட்டதால் இது கட்சியைப் பலவீனமடைய செய்யும் என முன்னாள் அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். 

அரசாங்கத்தின் பல திட்டங்களில் எனக்கும் அன்வாருக்கும் முரண்கள் ஏற்பட்டது. முக்கியமாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளில் நான் வெளிப்படையாகப் பேசிய பல கருத்துகளுடன் அன்வார் முரண்பட்டுள்ளார். அதனால் அன்வாருக்கு எதிரான மனநிலையில் நான் இருப்பதாக அன்வார் நினைத்துக் கொண்டார் என்றும் தம்மை பல நேரங்களில் கோபமாகத் திட்டியிருப்பதாகவும் Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாகத் தெரிவித்தார். பி.கே.ஆரின் இப்போதைய அரசியல் பாதை முற்றாக மாறிவிட்டது. பல பி.கே.ஆர் தலைவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். புதிய செல்வந்தர்கள் இப்போது திடீரென உருவாகிவிட்டனர். இது பி.கே.ஆரின் உண்மையானத் தொண்டர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்பதால் தாம் மீண்டும் பி.கே.ஆரின் தலைமை பொறுப்புகளை வகிக்க வாய்ப்பே இல்லை என்றும் Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *