மக்கள் கருத்தைக் கேட்காத கல்வி அமைச்சர்! – ரபீசி விமர்சனம்!
- Thinagaren Sanggaren
- 17 Aug, 2025
ஆகஸ்ட் 17,
பள்ளிகளில் நிலவும் பகடிவதைகளைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli கல்வி அமைச்சர் Fadhlina Sidek-க்கு வலியுறுத்தி உள்ளார். கல்வி அமைச்சர் Fadhlina Sidek திறந்த மனதுடன் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Rafizi Ramli வலியுறுத்தினார். கல்வி அமைச்சு பகடிவதை பிரச்சனைகளைக் கையாளுவதில் சுணக்கம் காட்டி வருவதாகவும் அடிப்படை சிக்கலை ஆராய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் Datuk Seri Rafizi Ramli குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வெளிப்படையாக நிகழும் பகடிவதைகளுக்குத் திரைக்குப் பின்னால் தீர்வு காண முடியாது என்பதைக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek உணர வேண்டும் என Datuk Seri Rafizi Ramli வலியுறுத்தினார். பகடிவதையை முற்றிலுமாக துடைத்தொழிக்க கல்வி அமைச்சு அதன் அதிகாரிகளுடன் மட்டும் கலந்தாலோசித்தால் போதாது. இது பொதுமக்கள் தொடர்புடையது என்பதால் பெற்றோர்கள், முன்னாள் மாணவர் அமைப்புகள் பள்ளிகளுடன் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுடன் கல்வி அமைச்சு சந்திப்புகளை நடத்தி அவர்களின் கருத்துகளையும் உள்வாங்க வேண்டும், ஆனால் கல்வி அமைச்சர் Fadhlina Sidek அதிகாரிகளின் கருத்துகளை மட்டுமே கேட்பதால் பகடிவதைக்குத் தீர்வு கிடைக்காது என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



