கல்வி அமைச்சு வழங்கினால் அமைச்சரவைக்குத் திரும்புவேன்! – RAFIZI RAMLI!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 26, 

பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து அமைச்சரவையிலிருந்து விலகிய Datuk Seri Rafizi Ramli மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பும் எண்ணம் இருப்பதாகவும் அப்படி அமைச்சரவைக்குத் திரும்பினால் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நேற்று இயங்கலையில் நடத்தப்பட்ட ஒரு விவாதத்தின் போது இளம் வயதிலிருந்து கல்வி என்பது வாழ்வாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். அப்படியானக் கல்வி முறை மலேசியாவில் சாத்தியப்படுமா எனும் கேள்வியும் தமக்கு இருப்பதாகவும் ஆனால் கல்வி அமைச்சின் ஆய்வுகளின் அடிப்படையில் செயல்படுத்த முடியும் என்பதைத் தாம் நம்புவதாகவும் ஆனால் இப்போதைய கல்வி அமைச்சரான FADHLINA SIDEK தனது கருத்துகளை நிராகரிப்பதாகவும் Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றுக்குமான தொடக்கம் என்பது பள்ளிக் கூடங்கள் என்பதால், கல்வித் துறையில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள் பலவற்றைத் தாம் அடையாளம் கண்டுள்ளதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். ஆனால் அதனைச் செயல்படுத்த வேண்டியது கல்வி அமைச்சர் என்பதால் பொருளாதார அமைச்சை விடவும் கல்வி அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய நான் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்புவேன் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். ஆனால் கல்வி அமைச்சை FADHLINA SIDEK விட்டுக்கொடுப்பாரா என்றால் அது நிச்சயம் கிடையாது என்பதும் எனக்கு நன்கு தெரியும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *