2.5 பில்லியன் ஊழல் குற்றச்சாட்டை ரபிசி ரம்லி மறுப்பு – ‘இது முழுக்க முழுக்க பொய்’
- Tamil Malar (Reporter)
- 20 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 20-
முன்னாள் பொருளாதார அமைச்சர் மற்றும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி மீது சுமத்தப்பட்ட 2.5 பில்லியன் ஊழல் குற்றச்சாட்டை அவர் கடுமையாக மறுத்துள்ளார். தன்னுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாக வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் என அவர் விளக்கம் அளித்தார்.
இந்த குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு எனவும், குறிப்பாக ‘கேப்ரிஸ்’ என அறியப்படும் செல்வாக்காளர் அரிஸ் ரம்லி இதை பரப்பியதாகவும் ரபிசி தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டது, தேசிய ஆற்றல் மாற்றத் திட்டம் (NETR) தொடர்பாக UEM Lestra நிறுவனம் மேற்கொள்ளும் 2.5 பில்லியன் முதலீட்டைச் சுற்றிய விவகாரம் என கூறப்படுகிறது.
“எனது பெயரைச் சுட்டிக்காட்டி, எனக்கு தொடர்புள்ள நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாக கூறுவது முற்றிலும் பொய்யானது. இது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மற்றொரு அவதூறு பிரச்சாரம் மட்டுமே,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த வகையிலான ஊழல் அல்லது தவறான ஒப்பந்த வழங்கலிலும் தமக்கு தொடர்பில்லை என்றும், உண்மையற்ற குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Inbachudar Muthuchandran
முன்னாள் பொருளாதர அமைச்சர் ரபிசி ரம்லி ஓர் உண்மையான போராட்டவாதி. ஆட்சி மாற்றத்திற்கு பெரிதும் துணை நின்றவர்.பி.கே.ஆர் கட்சி தேர்தலில் அவர் தோல்வியுற்றார் ஆனால் இன்னும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது உண்மை இருக்காது என பலரும் பேசி வருகின்றனர். எல்லாம் வேலனுக்கே வெளிச்சம்



