குற்றங்களிலிருந்து அரசியல்வாதிகள் தப்பிக்க சட்டம் வழிவகுக்கிறதா? Rafizi Ramli கேள்வி!
- Thinagaren Sanggaren
- 12 Sep, 2025
செப்டம்பர் 12,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதான குற்றவியல் வழக்குகள் NFA அடிப்பிடையில் தள்ளுபடி செய்யப்படுவதை முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Rafizi Ramli கடுமையாகச் சாடினார். NFA என்பது No Further Action எனும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதாரவாக அவர்களின் முந்தைய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு தேசிய நீதித்துறையால் எடுக்கப்படும் முடிவு எனப்படுகிறது.
இந்த NFA சட்டத்தால்
கடந்த 2020 முதல் இந்த ஜூலை மாதம் வரையில் 41 அரசியல் தலைவர்களுக்கு எதிரான குற்றவியல்
புகார்கள் தள்ளுபடி செய்திருப்பதைப்
பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவர் Datuk Rafizi Ramli மேற்கோள்காட்டினார்.
இது வெளிப்படையாக ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்களைச் சட்டத்திலிருந்து பாதுகாப்பதாகவும்
இதன் மூலம் முறையான விசாரணைகள் இல்லாமல் அரசியல்வாதிகள் மீதானப் புகார்கள் தள்ளுபடி
செய்யப்படுவதாகவும் முன்னாள் பெருளாதார அமைச்சர் Datuk Rafizi Ramli சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



